02/10/2019
காந்தி பிறந்தநாள்
💫 சிறுகதைப்போட்டி
போட்டி எண் : 4 போட்டிவகை :1நிமிடக் கதை
தலைப்பு : *காந்தியின்
கால்தடம்* 👣
நாள் : 27/9/19
🙏🙏🙏🙏 🙏 🙏 🙏
அன்புசால் தமிழ்நெஞ்சங்களுக்கு வணக்கம்கடந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில் தொடங்கப்பட்ட இக்குழுவில் இடம்பெற்று தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகைப் பள்ளிப் பாடஆசிரியர்கள், பதிப்பகத்தார், அறக்கட்டளை நிர்வாகிகள்,ஆசிரியப் பயிற்றுநர்கள், பத்திரிக்கை நிருபர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
💐💐💐💐💐💐💐💐💐
அறிவின் பிறப்பிடமாய் விளங்கும் ஆசிரியர் பெருமக்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் கொளரவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நமதுசொல்வெட்டுச் சிற்பங்கள் குழுவின் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும், பரிசுபெற்றும் வரும் அனைத்து கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நமது கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் அடுத்த பெருமுயற்சியாக தமிழ்ப் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை இதழ்களில் அச்சேற்றி எட்டுத்திக்கும் கொண்டு சேர்த்து புகழ்மணக்கச் செய்யவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
👏👏👏👏👏👏👏👏👏
முத்தான முதல் அறிவிப்பாக எதிர்வரும் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் கால்தடம் என்ற தலைப்பில் 1நிமிடச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது
🔸🔹🔸 நிபந்தனைகள்
🎯இக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கலாம்
🎯A4 தாளில் அதிகபட்சம் இரண்டு பக்கங்களில் அமையுமாறு இருத்தல் வேண்டும்
🎯 சொல்வெட்டுச் சிற்பங்கள் என்ற தலைப்பை முதன்மையாகவும், காந்தியின் கால்தடம் என்பதை துணைத் தலைப்பாகவும் இடவேண்டும்
🎯தலைப்புகளின் கீழேயே முதல் பக்கத்தில் வலம்/இடப்பக்க ஓரத்தில் தங்களது பெயர், பள்ளியின் முழு முகவரி, நாள், இடம் மற்றும் கைபேசி எண்ணைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். கதையின் முடிவுப் பகுதியின் கீழ் தங்கள் கையொப்பம் இட வேண்டும்
🎯 தெளிவான கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி படம்பிடித்து இக்குழுவில் பகிர வேண்டும்
🎯 தேர்வு செய்யப்படும் சிறந்த கதைகள் தமிழ்த் தாராமதி சிற்றிதழில் தங்கள் புகைப்படத்துடன் இடம்பெற்று வாழ்த்துப்பரிசுடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும்
🎯 இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றோர்,பெறவிருப்போர், பங்கேற்றோர் அனைவரும் தங்கள் படைப்புகளை பத்திரப்படுத்தி வைக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவில் தொடங்கப்படும் தமிழ்நாடு தமிழ்ச்சங்க மாதஇதழில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன
🎯 கடைசி இரண்டு போட்டிகளுக்கான பரிசுகள் கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் கலையரங்கில் வழங்கப்படும்
💫 கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்
🔹06/10/2019
ஞாயிறு
🙏நன்றி......
திருமதி.பிரியதர்சினி விமல்ராஜ்,
மாவட்டத் தலைவர் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முதல்வர், கேர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
பெரியநாயக்கன்பாளையம்,
பொருளாளர், தமிழ் தாராமதி சிற்றிதழ்
கோயம்புத்தூர்.
☎ 9843018212
💐வாழ்த்துகள்........
🙏தமிழுடன்......
🏹 மு.தினேஷ்பாபு எம்ஏ,பிஎட்
மாநில செய்தித் தொடர்பாளர்
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்
சென்னை
www.tnta.co.in
📱 7449010090
Thanks A Lot...
ReplyDeleteba exam time table 2019 up