...🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்✒....
🙏தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்-கோவை
📚கல்வி வளர்ச்சி நாள்📚
சிறப்பு கவிதைப் போட்டி
அறிவிக்கை நாள்-12/7/19
போட்டி எண் : 2
போட்டி வகை : கவிதை
தலைப்பு :இதோ!
நான்படிச்ச
பள்ளிக்கூடம்.
💐💐💐💐💐💐💐💐💐
அன்புசால் தமிழாசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். தமிழ்ப்புத்தாண்டு அன்று அலர்ந்த நமது குழுவில் இணைந்து சிறந்த, பயனுள்ள செய்திகளைப் பதிந்தும் பகிர்ந்தும் நல்லாதரவு வழங்கி வரும் அனைத்து அன்பு ஆசிரியப் பெருமக்கள், பத்திரிக்கை நிருபர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருகிற சூலை 15 அன்று கர்மவீரர், கல்விச் சாலை தந்த ஏழைத் தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
👏👏👏👏👏👏👏👏
அதைமுன்னிட்டு கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில் கவிதைப்போட்டி அறிவிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢விதிமுறைகள்
🔴தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் - சொல்வெட்டுச் சிற்பங்கள்
"இதோ! நான்படிச்ச பள்ளிக்கூடம்."
என்ற தலைப்பில் கவிதை இருக்க வேண்டும்.
🔵 A4 தாளில் ஒரு பக்கம் மட்டுமே கவிதை இருக்க வேண்டும்.மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.
🔴கவிதை தம் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாக இருத்தல் நலம். அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.
🔵குறைந்தது 16 முதல் அதிகபட்சம் 20 வரிகளில் கவிதை இருக்க வேண்டும்.கையெழுத்து மற்றும் அழகுபடுத்துதலுக்கு முக்கியத்துவம் தரப்படமாட்டாது.
🔴ஒரு போட்டியாளர் ஒருமுறை மட்டுமே ஒரு கவிதையை மட்டுமே அனுப்ப வேண்டும். இரண்டாவதாக அனுப்புவதோ, காலம் தாழ்ந்து அனுப்புவதோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
🔵முழுமை பெற்ற கவிதையின் கீழ் போட்டியாளரின் பெயர், பதவி, பள்ளி முகவரி,அஞ்சல் குறியீட்டு எண்,கைபேசி எண் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
🔴கவிதைத்தாளை தெளிவாக புகைப்படம் (photo) எடுத்து சொல்வெட்டுச் சிற்பங்கள் குழுவில் பதிவிட வேண்டும்.
🔵போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள், பரிசுகள் வழங்கப்படும் இடம், தேதி போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.
💢தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. விதிமுறைகளுக்கு உட்படாத படைப்புகளை நிராகரிக்கவும், போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசு மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு.
🎁🎈🎉பரிசு விவரம் வருமாறு :
பரிசின் மொத்த மதிப்பு :
🎶 2500/INR
📚முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். பரிசுகள் புத்தகங்களாக மட்டுமே வழங்கப்படும்.
💥கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
15/07/2019
............ 💐வாழ்த்துகள்............
தமிழுடன்....
🏹தினேஷ்பாபு எம்.ஏ,பி.எட்
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் &
தமிழ்நாடு ஆசிரியர்சங்கம்
பதிவு எண் :137 /2009
கோயம்புத்தூர் - 641108
No comments:
Post a Comment