Friday, September 27, 2019

02/10/2019 காந்தி பிறந்தநாள் 💫 சிறுகதைப்போட்டி போட்டி எண் : 4 போட்டிவகை :1நிமிடக் கதை தலைப்பு : *காந்தியின் கால்தடம்* 👣 நாள் : 27/9/19

02/10/2019
காந்தி பிறந்தநாள்
     
     💫 சிறுகதைப்போட்டி

போட்டி எண்  : 4 போட்டிவகை :1நிமிடக் கதை
       தலைப்பு : *காந்தியின் 
                          கால்தடம்* 👣
               நாள் : 27/9/19

🙏🙏🙏🙏 🙏 🙏 🙏 
அன்புசால் தமிழ்நெஞ்சங்களுக்கு வணக்கம்

கடந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில் தொடங்கப்பட்ட இக்குழுவில் இடம்பெற்று தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகைப் பள்ளிப் பாடஆசிரியர்கள், பதிப்பகத்தார், அறக்கட்டளை நிர்வாகிகள்,ஆசிரியப் பயிற்றுநர்கள், பத்திரிக்கை நிருபர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

💐💐💐💐💐💐💐💐💐
அறிவின் பிறப்பிடமாய் விளங்கும் ஆசிரியர் பெருமக்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் கொளரவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நமது
சொல்வெட்டுச் சிற்பங்கள்  குழுவின் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும், பரிசுபெற்றும் வரும் அனைத்து கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நமது கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் அடுத்த பெருமுயற்சியாக தமிழ்ப் படைப்பாளிகளின் சிறந்த  படைப்புகளை  இதழ்களில் அச்சேற்றி எட்டுத்திக்கும் கொண்டு சேர்த்து புகழ்மணக்கச் செய்யவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
👏👏👏👏👏👏👏👏👏

 முத்தான முதல் அறிவிப்பாக எதிர்வரும் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் கால்தடம் என்ற தலைப்பில் 1நிமிடச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது

🔸🔹🔸 நிபந்தனைகள்

🎯இக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கலாம்

🎯A4 தாளில் அதிகபட்சம் இரண்டு பக்கங்களில் அமையுமாறு இருத்தல் வேண்டும்

🎯 சொல்வெட்டுச் சிற்பங்கள் என்ற தலைப்பை முதன்மையாகவும், காந்தியின் கால்தடம் என்பதை துணைத் தலைப்பாகவும் இடவேண்டும்

🎯தலைப்புகளின் கீழேயே முதல் பக்கத்தில் வலம்/இடப்பக்க ஓரத்தில் தங்களது பெயர், பள்ளியின் முழு முகவரி, நாள், இடம் மற்றும் கைபேசி எண்ணைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். கதையின் முடிவுப் பகுதியின் கீழ் தங்கள் கையொப்பம் இட வேண்டும்

🎯 தெளிவான கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி படம்பிடித்து இக்குழுவில் பகிர வேண்டும்

🎯 தேர்வு செய்யப்படும் சிறந்த கதைகள் தமிழ்த் தாராமதி சிற்றிதழில் தங்கள் புகைப்படத்துடன் இடம்பெற்று வாழ்த்துப்பரிசுடன்  பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும்

🎯 இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றோர்,பெறவிருப்போர், பங்கேற்றோர் அனைவரும்  தங்கள் படைப்புகளை பத்திரப்படுத்தி வைக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவில் தொடங்கப்படும் தமிழ்நாடு தமிழ்ச்சங்க மாதஇதழில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன 

🎯 கடைசி இரண்டு போட்டிகளுக்கான பரிசுகள் கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் கலையரங்கில் வழங்கப்படும் 

💫 கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்
🔹06/10/2019
      ஞாயிறு

🙏நன்றி......
திருமதி.பிரியதர்சினி விமல்ராஜ்,
மாவட்டத் தலைவர் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முதல்வர், கேர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
பெரியநாயக்கன்பாளையம்,
பொருளாளர், தமிழ் தாராமதி சிற்றிதழ்
கோயம்புத்தூர். 
☎ 9843018212

💐வாழ்த்துகள்........

🙏தமிழுடன்......

🏹 மு.தினேஷ்பாபு எம்ஏ,பிஎட்
மாநில செய்தித் தொடர்பாளர்
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்
சென்னை
www.tnta.co.in
📱 7449010090

Sunday, September 8, 2019

📚 கல்வி வளர்ச்சி நாள் கவிதைப்போட்டி 12/7/2019 💐💐💐💐💐💐💐💐💐 💢 வெற்றிபெற்றோர்

🏹 சொல்வெட்டுச் சிற்பங்கள்✒

🙏 தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்-கோவை

📚 கல்வி வளர்ச்சி நாள்
          கவிதைப்போட்டி
               12/7/2019

   💐💐💐💐💐💐💐💐💐

💢 வெற்றிபெற்றோர்

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
 📚 முதல் பரிசு - அகிலன் இயற்றிய வேங்கையின் மைந்தன் நூலைப் பரிசாகக் பெறுபவர்,
💫 திருமதி.அ.லதா பட்டதாரி ஆசிரியர் அ.உ.நிலைப்பள்ளி, இடிகரை கோவை-22

🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
📚 இரண்டாம் பரிசு - கவிஞர் கண்ணதாசன் இயற்றிய சேரமான் காதலி நூலைப் பரிசாகக் பெறுபவர்.
💫 சு.பானுமதி,பட்டதாரி ஆசிரியர், சபர்மன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர் கோவை-9

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
📚 மூன்றாம் பரிசு - கவிஞர் வைரமுத்து இயற்றிய கள்ளிக்காட்டு இதிகாசம் நூலைப் பரிசாகக் பெறுபவர்
💫 திரு.க.கார்த்திக்,ப. ஆசிரியர்,அரசு உயர்நிலைப் பள்ளி,ஊமாரெட்டியூர், ஈரோடு
   
............... 💐வாழ்த்துகள்.............
         

🙏 நன்றி

🔴 திரு.பி.கே.இளமாறன்
நிறுவனர் தலைவர்
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்&,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - சென்னை

🔴 தேர்வுக்குழு உறுப்பினர்கள் - சொல்வெட்டுச் சிற்பங்கள்

🌷தமிழுடன்...... 

🏹 மு.தினேஷ்பாபு MA,BED* மாவட்டச்செயலாளர்
 தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்&
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
பதிவுஎண் : 137 /2009
கோயம்புத்தூர்-641108
 www.tnta.co.in

போட்டி எண் : 2 போட்டி வகை : கவிதை தலைப்பு :இதோ! நான்படிச்ச பள்ளிக்கூடம்.

...🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்✒....

🙏தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்-கோவை


📚கல்வி வளர்ச்சி நாள்📚

  சிறப்பு கவிதைப் போட்டி
  அறிவிக்கை நாள்-12/7/19

போட்டி எண்   : 2
போட்டி வகை : கவிதை
தலைப்பு         :இதோ!
                          நான்படிச்ச
                          பள்ளிக்கூடம்.
                       
                   


💐💐💐💐💐💐💐💐💐
அன்புசால் தமிழாசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். தமிழ்ப்புத்தாண்டு அன்று அலர்ந்த நமது குழுவில் இணைந்து சிறந்த, பயனுள்ள செய்திகளைப் பதிந்தும் பகிர்ந்தும் நல்லாதரவு வழங்கி வரும் அனைத்து அன்பு ஆசிரியப் பெருமக்கள், பத்திரிக்கை நிருபர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வருகிற சூலை 15 அன்று கர்மவீரர், கல்விச் சாலை தந்த ஏழைத் தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
👏👏👏👏👏👏👏👏

அதைமுன்னிட்டு கோவை மாவட்ட தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில் கவிதைப்போட்டி அறிவிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


💢விதிமுறைகள்

🔴தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் - சொல்வெட்டுச் சிற்பங்கள்
"இதோ! நான்படிச்ச பள்ளிக்கூடம்."
என்ற தலைப்பில் கவிதை இருக்க வேண்டும்.

🔵 A4 தாளில் ஒரு பக்கம்       மட்டுமே கவிதை இருக்க வேண்டும்.மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.

🔴கவிதை தம் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாக இருத்தல் நலம். அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

🔵குறைந்தது 16 முதல் அதிகபட்சம் 20 வரிகளில் கவிதை இருக்க வேண்டும்.கையெழுத்து மற்றும் அழகுபடுத்துதலுக்கு முக்கியத்துவம் தரப்படமாட்டாது.

🔴ஒரு போட்டியாளர் ஒருமுறை மட்டுமே ஒரு கவிதையை மட்டுமே அனுப்ப வேண்டும். இரண்டாவதாக அனுப்புவதோ, காலம் தாழ்ந்து அனுப்புவதோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

🔵முழுமை பெற்ற கவிதையின் கீழ் போட்டியாளரின் பெயர், பதவி, பள்ளி முகவரி,அஞ்சல் குறியீட்டு எண்,கைபேசி எண் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

🔴கவிதைத்தாளை   தெளிவாக புகைப்படம் (photo) எடுத்து சொல்வெட்டுச் சிற்பங்கள் குழுவில் பதிவிட வேண்டும்.

🔵போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள், பரிசுகள் வழங்கப்படும் இடம், தேதி போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.

💢தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. விதிமுறைகளுக்கு உட்படாத படைப்புகளை நிராகரிக்கவும், போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசு மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு.


🎁🎈🎉பரிசு விவரம் வருமாறு :

பரிசின் மொத்த மதிப்பு :
🎶 2500/INR

📚முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். பரிசுகள் புத்தகங்களாக மட்டுமே வழங்கப்படும்.


💥கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
15/07/2019

............ 💐வாழ்த்துகள்............ 



தமிழுடன்....

🏹தினேஷ்பாபு எம்.ஏ,பி.எட்
   மாவட்டச் செயலாளர்,
   தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் &
   தமிழ்நாடு ஆசிரியர்சங்கம்
   பதிவு எண் :137 /2009
   கோயம்புத்தூர் - 641108

போட்டி எண் : 1 வடிவம் : கவிதை தலைப்பு :உழைப்போம் முடிவுகள் மே 8,2019 அன்று தமிழ்நாடு தமிழ்ச்சங்க நிறுவனர் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் 🔴திரு பி.கே.இளமாறன் ஐயா அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது உயர்வோம்

.....🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்.....✒

♥💜💙💚அன்புசால் தமிழாசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழாசிரியர் பெருமக்களின் திறமைகளையும், படைப்பாற்றலையும் கொளரவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இக்குழுவிற்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் அனைத்துவகைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், இதழாசிரியர்கள், நிருபர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உழைப்பாளர் தின சிறப்புக் கவிதைப்போட்டியின் முடிவுகள் தெரிவுக்குழுவின் மூலம் பெறப்பட்டு முடிவுகள் மே 8,2019 அன்று 
 தமிழ்நாடு தமிழ்ச்சங்க நிறுவனர் தலைவர் மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்

🔴திரு பி.கே.இளமாறன் ஐயா அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
👏👏👏👏👏👏👏👏

இன்று 15/5/2019

📚" அமரர் கல்கி" அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புதினங்களை(நாவல்கள்) பரிசுகளாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

🔴முதல்பரிசு 🥇
.... அமரர் கல்கியின்....
"பொன்னியின் செல்வன்"
 (5 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு )

🏆பரிசு பெறும் ஆசிரியர்:
   புலவர் இரத்தினநடராசன்,
   அரசு ஆண்கள்
   மேல்நிலைப்பள்ளி,
    தொண்டாமுத்தூர்👏

🔴இரண்டாம் பரிசு 🥈
..... அமரர் கல்கியின்.....
"வேங்கயின் மைந்தன்"
(4 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு)

🏆பரிசு பெறும் ஆசிரியர் :
    க.பூரணவள்ளி,
    அரசு உயர்நிலைப் பள்ளி
    காந்திமாநகர்👏

🔴 மூன்றாம் பரிசு 🥉
...... அமரர் கல்கியின்......
"பார்த்திபன் கனவு"
(3 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுதி)

🏆பரிசு பெறும் ஆசிரியர் :
   மா.வெண்ணிலா,
    அரசு மேனிலைப் பள்ளி,
    சுண்டக்காமுத்தூர் 👏

📌குறிப்பு :
  போட்டியில் பங்கேற்ற ஏனைய ஆசிரியர்களுக்கும் அமரர் கல்கியின் ஏதேனுமொரு நூல் ஊக்கப்பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 👏👏👏

........💐வாழ்த்துகள் 💐.........

🙏தமிழுடன்...
🏹தினேஷ்...
செயலாளர்,
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்&
மாவட்டசெயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
கோயமுத்தூர்...✒

🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்...✒ 🎈🎉கவிதைப்போட்டி🎉🎈 போட்டி எண் : 1 வடிவம் : கவிதை தலைப்பு :உழைப்போம் உயர்வோம்

🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்...✒

🎈🎉கவிதைப்போட்டி🎉🎈

போட்டி எண் : 1 
        வடிவம்  : கவிதை
      தலைப்பு :உழைப்போம்    
                   உயர்வோம்

நிபந்தனைகள் 🎯

🎯ஓய்வுபெற்ற                       தமிழாசிரியர்கள், தற்போது பணியாற்றும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

🎯இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மட்டுமே கவிதை அனுப்ப முடியும். குழுவில் இல்லாத ஆசிரியர்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால் தங்கள் கட்செவி அஞ்சல் எண்ணை பதிவு செய்து பின்னர் அனுப்பலாம். வரும் 25,26,ஆகிய தேதிகளுக்குள் இணைக்க வேண்டும்

🎯 A4 வெள்ளைத்தாளில் 1 பக்கம் மட்டுமே கவிதை இருக்க வேண்டும்.


🎯முழுமை பெற்ற  கவிதையின் கீழ் தங்களின் கையொப்பம், பெயர், பதவி, பள்ளி முகவரி.ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

 "சொல்வெட்டுச் சிற்பங்கள்"
    உழைப்போம் உயர்வோம்
என்ற தலைப்பு இருக்க வேண்டும்

🎯குறைந்தது 40 அதிகபட்சமாக 50 வார்த்தைகள் இடம்பெறலாம்.


🎯மரபு அல்லது புதுக்கவிதை வடிவில் இருக்கலாம்


🎯கவிதைத்தாளை ஒளிப்படம் எடுத்து (photo)கடைசி தேதியான

 🔴மே1 மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

🎯ஒளிப்படம் தெளிவாக புரியும்படி இருத்தல் வேண்டும். கையெழுத்து, அழகுபடுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் & முன்னுரிமை தரப்படாது.

🎯கவிதையின் மூலப்படியை (ஒரிஜினல்) பங்கேற்பு ஆசிரியர்கள் பத்திரப்படுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


🎯ஒருஆசிரியர் ஒரு கவிதையை ஒருமுறை மட்டுமே அனுப்ப வேண்டும். இரண்டாவதாக அனுப்புவதோ.,ஏற்கனவே அனுப்பியதை நீக்கிவிட்டு வேறு அனுப்புவதோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவரவர்க்குரிய கவிதை அவரவர் எண்ணிலிருந்து மட்டும் அனுப்ப வேண்டும்.


🎯கவிதைப்போட்டிக்கான காலம் தொடங்கிவிட்டதால்,தொடர்பில்லாத  பிற பதிவுகள், எதுவும் பதியவோ, பகிரவோ வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

♦பதியும் கவிதைகளை விமர்சிக்கவோ, மதிப்பிட்டு கருத்து தெரிவிக்கவோ வேண்டாம் பெருந்தகைகளே!


📚பரிசுகளாக புத்தகங்கள் மட்டுமே வழங்கப்படும்.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

📚பரிசு மதிப்பு
ரூ.2500

(குறிப்பு - பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசுமதிப்பை கூட்டவோ, குறைக்கவோ தெரிவுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு)

🔴தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானது

.......💐வாழ்த்துகள்💐.......

தமிழுடன், 
🏹தினேஷ்...
செயலாளர்,
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்,
கோயம்புத்தூர்✒

Wednesday, August 7, 2019

💫 *TNTA-கோவை-செய்திகள்* 🇮🇳 🌼 *நாள் : 8/8/19*

💫  *TNTA-கோவை-செய்திகள்* 🇮🇳

🌼 *நாள் : 8/8/19*

1⃣ *மேக்கேதாட்டு அணைகட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மறுப்பு.கோரிக்கையை நிராகரித்தது நடுவண் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு*

2⃣ *முன்னாள்  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்*

3⃣ *நீலகிரியில் கனமழை.பில்லூர் அணையிலிருந்து 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்*

4⃣ *அத்திவரதரை தரிசிக்க 10 நாள்களே அவகாசம்.பாதுகாப்பைப் பலப்படுத்த முதல்வர் ஆணை*

5⃣ *ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு 14பேர் பலி*

6⃣ *சிபிஎஸ்இ: 10,12 வகுப்பு மாணவர்களுக்கு திசம்பரில் செய்முறைத் தேர்வு*

7⃣ *9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி*

8⃣ *இளம் அறிவியல் அறிஞர்களுக்கு ஆதரவு ஊதியம்-தமிழக அரசு தகவல்*

9⃣ *28 ஆயிரத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை*

🔟 *விண்டீஸுக்கு எதிரான T20 தொடரை வென்றது இந்தியா (3-0)*

...📚 *கல்வியே உயர்வு* 📚...

Sunday, August 4, 2019

💫 TNTA-கோவை-செய்திகள்🦜 🔸நாள் : 5/8/19 🔸

💫 TNTA-கோவை-செய்திகள்🦜
           🔸நாள் : 5/8/19 🔸
1.வேலூர் மக்களவைத் தேர்தல்.வாக்குப்பதிவு தொடங்கியது


2.  அப்துல்லா, மெகபூபா வீட்டுக்காவலில் அடைப்பு ஜம்முவில் 144 தடை உத்தரவு. காஷ்மீர் சிறப்பு நிலை அந்தஸ்தை நீக்க நடுவணரசு தீவிரம் 


3. அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகனை இந்தியா வெற்றிகர சோதனை


4. "கற்றால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவினைப்பெற முடியும்" ஈரோடு புத்தகத் திருவிழாவில் கு.ஞானசம்பந்தன் பேச்சு


5. +1 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்


6. கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு 70 ஆயிரம் பேர் பாதிப்பு


7. நாடு முழுவதும் 4000 விசாரனை நீதிபதிகள் நியமனம்


8. அத்திவரதரை தரிசிக்க வரலாறு காணாத கூட்டம்.7 நாள்களாக வரிசையில் நிற்கும் பக்தர்கள்


9. போலந்த் மல்யுத்தம்-தங்கம் வென்றார் இந்திய வீரர் வினேஷ் போகட்


10. இரண்டாவது T20 இந்தியா வெற்றி

.......📚 கல்வியே உயர்வு 📚....


🎶தமிழுடன்
🏹 மு.தினேஷ்பாபு MA,BED.
 மாவட்டச்செயலாளர்
 தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் &
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
பதிவு எண் : 137/2009
கோயம்புத்தூர் - 641108
www.tnta.co.in
Cell :7449010090.....✒